தனியாருக்கு சொந்தமான ரத்த வங்கியில் இருந்த உரிய ஆதாரம் இல்லாத 11 யூனிட் ரத்தம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள சங்கர் நகரில் தனியாருக்கு சொந்தமான ரத்த வங்கி செயல்பட்டு வருகின்றது. அங்கு நேற்று மருத்துவ ஆய்வாளர் சந்திராமேரி தலைமையில் குழுவினர் சோதனை நடத்தியுள்ளனர். அந்த சோதனையில் 11 யூனிட் ரத்தம் முறைகேடாக இருந்ததால் அவற்றை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து சந்திராமேரி கூறும் போது ஒரு நபரிடம் ரத்தம் எடுத்தால் 350 மில்லி தான் எடுக்க வேண்டும், ஆனால் இவர்கள் 550 மில்லி இரத்தம் எடுத்துள்ளார்கள். மேலும் அதை இரண்டாகப் பிரித்து இரண்டு பேருக்கு விற்பனை செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து ரத்தத்தில் தொற்று இருக்கிறதா இல்லையா என்பதை உறுதிப்படுத்துவதற்காக எந்த ஆய்வும் மேற்கொள்ளவில்லை என கூறியுள்ளார்.மேலும் ரத்தம் யாரிடம் இருந்து சேகரிக்கப்பட்டது, எவ்வளவு பணத்திற்கு விற்பனை செய்துள்ளனர் போன்ற சரியான அதாரங்கள் ஏதும் இல்லாததால் அவை கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டு, இந்த வங்கி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.