Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எச்சரிக்கையாக இருங்க… இனி எல்லா சனிக்கிழமைகளிலும்… அதிரடி அறிவிப்பு…!!!

சென்னையில் எல்லா சனிக்கிழமைகளிலும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது.

இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் சென்னையில் திடீரென கொரோனா அதிகரித்து வருவதால்,மூன்றுக்கும் மேற்பட்டோருக்கு தொற்று இருந்தாலே அது கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்க வேண்டும் என மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் கொரோனா அதிகரிக்க காரணம் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதது தான். விதி மீறலில் ஈடுபடும் பொதுமக்கள், கடைகள் மற்றும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வேண்டுமென்றால் ஊரடங்கு தீவிரப்படுத்தப்படும் என கூறியுள்ளது. இந்நிலையில் சென்னையில் இன்று முதல் இரண்டு மாதம் வரை முககவசம் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வலியுறுத்தியுள்ளார்.

இதனையடுத்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கொரோனா தடுப்பு ஊசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம் இன்று  நடைபெறும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்தார். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 முதல் 59 வயதுக்கு உட்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

இதனையடுத்து சென்னையில் எல்லா சனிக்கிழமைகளிலும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். மக்களின் தேவைக்கு ஏற்ப கூடுதலாக ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு முகாம் நடத்த பரிசீலனை செய்யப்படும். யார் வேண்டுமானாலும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள சிறப்பு முகாமிற்குள் வரலாம். கொரோனா தடுப்பூசி குறித்து மக்கள் பீதி அடைய வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |