Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தவறியும் இதை செய்யாதீங்க…. அது கண்டிப்பா இருக்க கூடாது…. மீறினால் கடும் நடவடிக்கை… எச்சரிக்கை விடுத்த மாவட்ட கலெக்டர்…!!

ராணிப்பேட்டையில் அனுமதியின்றி கட்சி கொடியினை வாகனத்தில் கட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமலுக்கு கொண்டு வந்தது. மேலும் வாக்கு சேகரிப்பாளர்கள் மக்களுக்கு பரிசுப் பொருட்கள், பணம் வழங்குதல் போன்ற சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடாமலிருக்க தேர்தல் குழு அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழு ஆகியோர்களை நியமித்துள்ளனர்.

அந்த வகையில் ராணிப்பேட்டையில் இருக்கும் நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்காக 72 பறக்கும் படை குழுக்கள் நியமிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இவர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல் அனுமதியின்றி எந்தக் கட்சிக் கொடியினையும் வாகனத்தில் கட்டியிருந்தால் அவற்றையும் பறிமுதல் செய்து வருகின்றனர். இதற்கிடையே ராணிப்பேட்டை மாவட்ட அலுவலக கலெக்டர் கிளான்ஸ்டின் தேர்தல் விதிமுறைகளுக்கு மீறி எவரேனும் கட்சிக் கொடியினை வாகனத்தில் கட்டியிருந்தால் அவற்றை அகற்றுவதோடு மட்டுமல்லாமல் வாகன உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |