கொரோனா கொடிய வைரஸ் தொற்றினால் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் கடந்த ஆண்டு உகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக பரவி உலக நாடு முழுவதிலும் கோரத்தாண்டவமாடி பல கோடி மக்களின் உயிர்களை பறித்தது. அதுமட்டுமின்றி பெருமளவில் பொருளாதார சீர்குலைவையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடரில் இருந்து மக்களை பாதுகாத்து கொள்வதற்காக அனைத்து நாடுகளும் பொது முடக்கத்தை அமுல் படுத்தினார்கள்.
இதனால் மக்களின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு அன்றாட வாழ்க்கையே பெரும் சிரமத்தில் தள்ளப்பட்டது. இந்நிலையில் உலக வங்கியின் பொருளாதார வளர்ச்சி பற்றிய கணிப்புகளை பியூ நிதி ஆராய்ச்சி மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவில் கொரோனா பாதிப்பால் நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து ஏழ்மை அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த கொடிய வைரஸ் தொற்றினால் பல மக்கள் வேலையிழப்பு மானம் குறைதல் விலைவாசி உயர்வு என பல காரணங்களால் மக்களுக்கு பின்னடைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து 9.9 கோடியாக இருந்த நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை 6.6 கோடியாக குறைந்துள்ளது. மக்களின் தினசரி ரூ 140 குறைவாக வருமானம் வாங்குபவர்களின் எண்ணிக்கை 7.5 கோடியாக உயர்ந்துள்ளது என்பது வருத்தத்திற்குரியது என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.