Categories
தேசிய செய்திகள்

நடுவானில் பிறந்த பெண் குழந்தை… பிரசவம் பார்த்த மருத்துவருக்கு… குவியும் பாராட்டு ..!!

பெங்களூருவில் இருந்து ஜெய்ப்பூர் சென்ற விமானத்தில்  நடுவானில்  ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவிலிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு இன்று காலை 5.45 மணி அளவில் இண்டிகோ விமானம் புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது பெண் பயணி ஒருவருக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து விமான குழுவினர் அந்தப் பெண்ணின் நிலைமையை புரிந்து கொண்டு விமானத்தில் யாராவது மருத்துவர்கள் இருப்பார்களா என்று விசாரித்தனர்.

இதையடுத்து அதிர்ஷ்டவசமாக மருத்துவர் சுபஹான் நசீர் பயணித்தார். உடனே அப்பெண்ணுக்கு கேபின் குழு உதவியுடன் பிரசவம் பார்த்த பின்  பெண் குழந்தை பிறந்தது . இதுகுறித்து இண்டிகோ விமானம் கூறுகையில் பெங்களூரில் இருந்து ஜெய்ப்பூருக்கு சென்று கொண்டிருந்த போது விமானத்தில் குழந்தை பிறந்தது. தாயும் குழந்தையும் நலமாக உள்ளனர். தக்க சமயத்தில் பிரசவம் பார்த்த மருத்துவருக்கு பாராட்டு தெரிவிக்கிறோம். ஜெய்ப்பூர் விமான நிலையம் வந்து இறங்கியதும், மருத்துவருக்கும் விமான பயணிகளும் பரிசு வழங்கப்பட்டது என்று கூறினார்.

Categories

Tech |