நாகை அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் பப்ளிக் ஆபீஸ் சாலையில் உள்ள தனியார் தியேட்டர் ஒன்றில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வெளிப்பாளையம் பகுதியில் உள்ள காவல்துறையினருக்கு ரகசிய தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அங்கு சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர் 300 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அந்த 300 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தவர் வெளிப்பாளையம் பகுதியில் உள்ள பெருமாள் கோயில் தெருவில் வசித்து வரும் பசுபதி என்பது தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் பசுபதி மீது வழக்குப்பதிந்து பின் கைது செய்து சிறையில் அடைத்தனர்.