கோவை மாவட்டம் அம்மன் குளத்தில் வாக்காளர்களும், வேட்பாளர்களும் பங்குபெறும் மக்கள் தர்பார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல், நமக்கு வந்து ரயில் விட தெரியுது, மெட்ரோ ரயில் விட தெரியுது, ஒவ்வொரு ஊரிலும் ஏர்போர்ட் விரிவு படுத்த தெரியுது, மங்கல்யான் ராக்கெட் வேறு கிரகத்திற்கு விட தெரியுது, நம் மனிதர்கள் வாழும் இந்த சாக்கடை சுத்தம் செய்ய டெக்னாலஜி கிடையாதா ? இல்ல பன்ட் தான் கிடையாதா ?
உங்க குறையே கொண்டுபோய் பத்திரிகை மூலமா சேர்க்குறதுக்கு தான் இந்த பேட்டி. எனக்கு இந்த கேமரா எல்லாம் புதுசு இல்ல. அஞ்சு வயசுல இருந்து பாத்துட்டு இருக்கேன்.உங்களுக்கு இந்த கேமரா புதுசு, எனக்கு புதுசு இல்ல. இந்த செய்தியை கொண்டு போய் சேர்க்கணும், நான் இன்னொன்னு சொல்றேன். இந்த தொகுதி இப்போ ஏன் தொகுதி என்பதால் இதை வந்து நான் பார்க்கல. 234தொகுதியில் கண்டிப்பா ஓபன் சாக்கடை இருக்குற ஊரு, 99சதவீதம். இன்னைக்கு சொல்லுறேன்…
இங்க இருந்து ஒரு கிலோமீட்டர் நடந்து போனிங்கன்னா… பணக்காரன் கூடி இருக்கான். எந்த பணக்காரனுக்கு ஏழ்மையில் இருந்து ஒரு கிலோ மீட்டருக்கு மேல தள்ளி வாழ முடியாது. நீங்க அப்பறம் எப்படி ? ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்கின்றேன் என்ற டப்பா கதையெல்லாம் யார்கிட்ட விடுறீங்க. ஏழையை சிரிக்க வைக்கணும்னா முதலில் இதெல்லாம் நிக்கணும், அதை நீக்குவது என் கடமை. செய்ய முடியலன்னா ஒதுக்கி இருக்கணும், நான் செய்ய முடியாதுன்னு எதையும் விட்டுட்டு வந்தவன் கிடையாது. அதனால சொல்லுறேன் நான்.
இவங்களுக்கு இருக்குற கோவம் இங்க வந்து நின்னா தான் வரும் எனக்கு. வெளியில இருந்து ஏர் கண்டிசன் ரூமில் இருந்து பாத்தா அது தெரியாது. சாக்கடை தீவுக்குள்ள இவங்க வாழ்ந்துட்டு இருக்கிறது, இத்தனை அரசியல்வாதிகளுக்கு தெரியல. குரல் இருக்கு, கோவம் இருக்கு, கேக்க ஆளு இல்ல. இன்னைக்கு நான் இங்க வந்திருக்கேன், நான் கேட்டுருக்கேன். நாங்கள் மக்கள் குறைகளுக்கு செவிடா இருக்க மாட்டோம். ஏனா எங்களுக்கு இங்கிருந்து திருடி வாழ வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அப்படியே நாங்க இவங்க கிட்ட இருந்து காசு வாங்கினா…. அதுக்கான வேலையை செய்வோம். அது உங்கள் காசு, இது உங்கள் சொத்து, இத பாதுகாக்கணும்,
நீங்க குடியிருக்குற இடத்தில் இதுவரையிலும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இறந்து போயிருக்காங்க. அதுக்கு காரணம் இந்த ஆரோக்கியமற்ற சூழல் என சொல்றாரு. இதை கொண்டு சொல்ல வேண்டும். அதை செய்தியா ? யார் கிட்ட போய் சொல்வீங்கானா…. என்கிட்ட தான் சொல்லணும். இப்ப என்னை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் இங்க வருவேன்… இதை தீர்க்காமல் நான் போக மாட்டேன் என கமல் தெரிவித்தார்.