சிவகங்கை மானாமதுரையில் கொள்ளையடிப்பதற்காக திட்டம் போட்டு கொண்டிருந்த 5 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை ரயில்வே நிலையத்தில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஐந்து நபர்கள் சந்தேகம் படும்படியாக நின்றுகொண்டிருந்தனர். அவர்களிடம் சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ஒருவர் கிளாங்காடூர் பகுதியை சேர்ந்த ரவுடி அன்பழகன் என்பது தெரியவந்தது. அன்பழகன் அப்பகுதியில் பதில் இருந்ததும் தெரிந்தது.
அவருடன் இருந்தவர்கள் கிளாங்காடூர் பகுதியை சேர்ந்த அமர்நாத், பாம்பு விக்கி, ரமேஷ், சுரேஷ் பாண்டியன் என்பதும் தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரிடமும் காக்கல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் 5 பேரும் கொள்ளையடிப்பதற்காக திட்டம் தீட்டி கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிந்து பின் கைது செய்து சிறையில் அடைத்தனர்.