Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கிணற்றில் விழுந்த சிறுவன் … காப்பாற்ற முயன்ற பெண் …. இருவர் பலி…!!

கிணற்றில் விழுந்த சிறுவனும் அச்சிறுவனை காப்பாற்ற முயன்ற பெண்னும் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள வண்டலூரை அடுத்த ஊனமாஞ்சேரியில் சாலையோரம்  பழைய  பொருட்களை சேகரிக்கும் பணியில் இருக்கும் மக்கள்  மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் அங்கு மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த அனீஸ் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் அவரது  மகன் அப்துல் நேற்று முன்தினம்  விளையாடிக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் உள்ள கிணற்றில் எதிர்பாராத விதமாக  தவறி விழுந்தான். இதைப் பார்த்த அதே பகுதியில் வசிக்கும் அரியானா மாநிலத்தை சேர்ந்த, கதிஜா என்ற பெண் கிணற்றில் தவறி விழுந்த சிறுவனை காப்பாற்றுவதற்காக அவரும் கிணற்றில் குதித்தார்.  இந்த சம்பவத்தில்  இருவரும் உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த ஓட்டேரி  காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் விழுந்து இறந்து போன இருவரையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |