பிரபல இயக்குனர் லிங்குசாமியும், இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்தும் முதல்முறையாக படத்தில் இணைய உள்ளனர்.
தமிழில் சினிமாவின் பிரபல இயக்குனர் லிங்குசாமி தற்போது தெலுங்கில் படம் எடுக்க உள்ளார். அந்தப் படத்தில் ஹீரோவாக பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொதினேனி நடிக்க உள்ளார்.மேலும் இவருக்கு ஜோடியாக இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்க உள்ளார். இந்நிலையில் இப்படத்திற்கு யார் இசையமைக்கப் போகிறார் என்ற தகவலை லிங்குசாமி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட லிங்குசாமி இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார் என்று தெரிவித்துள்ளார். இயக்குனர் லிங்குசாமியும், இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்தும் இணைவது இதுவே முதல் முறையாகும்.