முகக் கவசம் அணியாமல் கொரோனாவை கேலி செய்த தான்சானியாவில் அதிபருக்கு ஏற்பட்டுள்ள நிலைமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலக நாடு முழுவதும் கடந்த வருடம் கொரோனா வைரஸ் என்ற நோய்த்தொற்றின் பிடியில் மாட்டிக்கொண்டு தவித்த நிலையில் அனைத்து நாடுகளும் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக பல நெறிமுறைகளை கடைப்பிடித்து வந்தது. அதில் முகக்கவசம் அணிவது பொது முடக்கம் சமூக இடைவேளை என அனைத்தையும் மக்கள் பின்பற்றி வந்தனர். இந்நிலையில் தான் சானியாவின் அதிபர் ஜான் மகுபலி முகக்கவசம் மற்றும் பொது முடக்கம் குறித்து விமர்சனம் செய்தார்.
மேலும் “தி புல்டோசர்” என மக்களால் அன்பாக அழைக்கப்படும் ஜான் மகுபலி தான்சானியாவின் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து அனைவரையும் தன் கொள்கைகளும் கோட்பாடுகளும் கவர்ந்து மகத்தான தலைவராக உருவாக்கினார். இந்நிலையில் தான்சானியாவில் கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் தகவல் பற்றி எந்த கருத்தையும் ஜான் மகுபலி தர மறுத்துள்ளார். கொரோனா தடுப்பு மருந்தின் மூலம் நம்நாட்டின் வளங்கள் சுரண்டப்படும் என மக்களுக்கு தவறான எச்சரிக்கையும் விடுத்தார்.
இந்நிலையில் கடந்த சில வாரமாக எந்தவொரு பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்த ஜான் மகுபலி தனது இருப்பிடத்தைக் கூட ரகசியமாக வைத்திருந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று அனைவராலும் சந்தேகப்படபட்டிருந்தது.ஆனால் தான்சானியாவில் அரசு தற்போது திடீரென ஜான் மகுபலி உயிரிழந்ததை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது .அவர் இறந்ததற்கான காரணம் அவருக்கு இருந்த நாள்பட்ட இதய நோய் தான் என்றும் அறிவித்துள்ளனர். தான்சானியாவில் அதிபர் ஜான் மகுபலி இறந்தது அந்நாட்டு மக்களுக்கு பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது