குக் வித் கோமாளி புகழுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்தவர் புகழ். அந்த நிகழ்ச்சியில் இவர் வெளிப்படுத்தும் காமெடி திறமையும், நடிப்புத் திறமையும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இதைத்தொடர்ந்து அவர் தற்போது நடிகர்அருண் விஜய் படத்திலும், சந்தானம் படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவருக்கு தற்போது மீண்டும் ஒரு பட வாய்ப்பு கிடைத்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பொன்ராம் இயக்கும் படத்தில் ஹீரோவாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். மேலும் இப்படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். இப்படத்தில் புகழ் நடிக்க உள்ளார்.