Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கீர்த்தி சுரேஷின் ‘ரங் தே’… ஜாலியான சூட்டிங் ஸ்பாட் வீடியோ…!!!

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் ரங் தே படத்தின் ஜாலியான சூட்டிங் ஸ்பாட் வீடியோ வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் நடிகை கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இதையடுத்து இவர் பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் அண்ணாத்த , சாணிக் காயிதம் ஆகிய படங்களை  கைவசம் வைத்துள்ளார்.

மேலும் இவர் தெலுங்கில் ரங் தே, குட் லக் சகி, சர்க்காரு வாரி பட்டா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் ரங் தே படம் வருகிற மார்ச் 26ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது . இந்நிலையில் நடிகர் நிதின் ஹீரோவாக நடிக்கும் ரங் தே படப்பிடிப்பு தளத்தில் ஜாலியாக எடுத்துக் கொண்ட வீடியோவை நடிகை கீர்த்தி சுரேஷ் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . ரசிகர்களை கவர்ந்த இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |