நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாக உள்ள சந்திரமுகி 2 படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் சந்திரமுகி . பி வாசு இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ஜோதிகா ,நயன்தாரா, பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டிருந்தது. இயக்குனர் பி வாசு இயக்கத்தில் உருவாகும் சந்திரமுகி 2 படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இதன் பின் இந்த படம் குறித்த எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.
இந்நிலையில் சந்திரமுகி 2 படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகியுள்ளது . இதில் வேட்டையன் அரண்மனைக்குள் புதிதாக ஒரு குடும்பம் செல்கிறது . இதன்பின் அந்த குடும்பம் வேட்டையனிடம் மாட்டிக்கொண்டு எப்படி தப்பிக்கிறது என்பதுதான் கதை என்று கூறப்படுகிறது. மேலும் இதில் வேட்டையன் கதாபாத்திரம் மிகவும் கொடூரமானதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.