Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“சிவப்பாக பிறந்த குழந்தை” மனைவியின் மீது சந்தேகம்… கொலை செய்த கணவன்..!!

கடலூரில் குழந்தை சிவப்பாக இருப்பதை காரணம் காட்டி நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்த கணவன் காவல்நிலையத்தில் சரணடைந்தார்   

கடலூர் மாவட்டம் பாலமேடு கிராமத்தைச் சேர்ந்த ராஜன் என்வருக்கு அமலா என்ற மனைவியும், 5 மாத ஆண் குழந்தையும் உள்ளது. இவர் அடிக்கடி தனது மனைவியிடம் வரதட்சணை கேட்டு அடித்து  துன்புறுத்தி வந்துள்ளார். மேலும் குழந்தை சிவப்பாக இருப்பதை காரணம் காட்டி மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

Related image

இந்த நிலையில் சம்பவத்தன்று பொழுது விடிந்து வெகுநேரம் ஆகியும் அமலா படுக்கையிலிருந்து எழுந்திருக்கவில்லை. இதனால் குழந்தையின் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அப்போது கணவன் சுரேஷ் வீட்டில் இல்லை. படுக்கையில் கிடந்த அமலாவை  எழுப்பியுள்ளனர். ஆனால் அவர் இறந்து கிடந்துள்ளார். பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார் அமலாவின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

Image result for Hitman strangles and kills woman with pillow while sleeps in bed,இதையடுத்து சுரேஷை தேடி வந்தநிலையில் காட்டுமன்னார் கோவில் காவல் நிலையம் சென்று  மனைவியை கொலை செய்து விட்டதாக அவரே சரணடைந்தார். மேலும் குழந்தை சிவப்பாகப் பிறந்தால் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தலையணையால் அமுக்கி கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |