Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்கள் சிங்கங்கள் அல்ல…! உங்களை மட்டுமே நம்புறோம்…. யாருக்கும் பயப்பட மாட்டோம் …!!

மானாமதுரை தொகுதி திருப்புவனம் சந்தை அருகில் தேர்தல் பரப்புரையில் பேசிய சீமான், நமக்கு தேவைப்படுவது  ஆள் மாற்றம் ஆட்சி மாற்றம் அல்ல. அடிப்படை அமைப்பு அரசியல் மாற்றம் தேவைப்படுகிறது. கட்சி, ஆட்சிகளால் இதை சரி செய்ய முடியாது, புரட்சி ஒன்றால்  தான் இந்த ஆட்சி முறையை புரட்டிப் போட முடியும். அதனால் தான் உங்கள் பிள்ளைகள் தீய ஆட்சி முறையை ஒழித்து, தூய ஆட்சி முறையை மலர செய்ய… கேடுகெட்ட பணநாயகத்தை ஒழித்து , மாண்புமிக்க ஜனநாயகத்தை மலர செய்ய….

பணம் இருப்பவன் தான் அரசியல் செய்ய முடியும் என்கிற அந்த நிலைப்பாட்டை தகர்த்து,  மக்களுக்கு தூய உள்ளத்தோடு சேவை செய்யவேண்டும் என்கிற மனம் இருக்கிறவனும் அரசியல் செய்ய முடியும் என்கின்ற நிலையில் உருவாக்க முடியும். எனவே இந்த நிலத்தில் புரட்சிகர அரசியலையும்,  மாறுதலையும் ஏற்படுத்த வேண்டும் என்று உழைத்து கொண்டு வருகிறோம். யாரோடும் அணி சேராது, தனித்து நிற்பதற்கு காரணமும் அதுதான். நான் முழுக்க முழுக்க நூறு விழுக்காடு என் மக்களை நான் நம்புகிறேன் .

என்னை பெற்றவர்கள், எங்கள் உடன் பிறந்தவர்கள்,  எங்களை கைவிட்டு விட மாட்டார்கள் என்று அசைக்க முடியாத நம்பிக்கையில் தான் தொடர்ச்சியாக இந்த பணியை தனித்து தனித்து களத்திலே நின்றுபோராடி வருகின்றோம். ஆனால் நாங்கள் உறுதியாக வெட்டுவோம். எங்கள் மொழிக்காக, எங்கள் இனத்திற்காக, பல்லாயிரக்கணக்கானோர் இன்னுயிரை கொடுத்தது உண்மையானால், அவர்கள் மூச்சி காற்றை நாங்கள் சுவாசித்து வளர்வது உண்மையானால், நாங்கள் உறுதியாக வெல்வோம் அதில் எந்த மாற்றமும் இல்லை.

எங்கள் தலைவர் எங்களுக்கு கற்பித்தது போல சத்தியம் எங்களுக்கு சான்றாக இருக்கிறது, வரலாறு எங்களை வழிநடத்துகிறது. அதனால் நாங்கள் தொடர்ந்து போராடிக் கொண்டு இருப்போம். புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இழந்துவிட்ட உரிமைகளை பிச்சை கேட்டு பெற முடியாது, போராடித்தான் பெற்றாக வேண்டும் என்கிறார்.கோயில்களில் எப்போதும் ஆடுகளைத் தான் பலியிடுகிறார்களே தவிர,  சிங்கங்களை அல்ல என்கிறார். நாங்கள் சிங்கங்கள் அல்ல… புலிகள்,  அதுவும் விடுதலைப்புலிகள். எதற்கும் அஞ்சாது  தொடர்ச்சியாக போராடிக்கொண்டு இருப்போம் என சீமான் தெரிவித்தார்.

Categories

Tech |