Categories
தேசிய செய்திகள்

இங்க என்ன நடக்குது?… டென்ஷனான விராட் கோலி… மைதானத்தில் பரபரப்பு… வைரலாகும் வீடியோ…!!!

 இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் விராட் கோலி டென்ஷனான வீடியோ வைரலாகி வருகிறது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான நான்காவது டி 20 போட்டி நடைபெற்று வரும் நிலையில் முதலாவதாக இந்திய அணி பேட்டிங் செய்துள்ளது. இந்திய அணியின் இலக்கான 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக ஆடிய இங்கிலாந்து அணி இந்த இலக்கை நோக்கி ஆடத் தொடங்கிய நிலையில் இந்திய வீரர் சூர்யகுமார் முதலில் அவுட் ஆனது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சாம் குரான் பந்து வீசிய போது இவர் அடித்த ஷாட் டேவிட் மலானின் கைக்குள் சென்றது .

ஆனால் மலான் பந்தைக் கீழே வைத்த நிலையில் முடிவு மூன்றாவது நடுவருக்கு கொடுக்கப்பட்டது. 3-வது நடுவர் ஆட்டத்தை ரீப்ளே செய்து பார்த்த போது பந்து  தரையில் படுவதுபோல் தெரிந்ததால்  சூரியகுமார் அவுட் என மூன்றாம் நடுவர் தெரிவித்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் சூரியகுமார் அவுட் என மூன்றாம் நடுவர் கூறியவுடன் மைதானத்திலுருந்த விராட் கோலியின் ரியாக்ஷன் பெரும் கோபத்தையும் கடுப்பையும் ஏற்படுத்தியது. கோலி தனது கையை நீட்டி தவறான முடிவை கூறிவிட்டதாக வெளிப்படுத்தும் ரியாக்சன் சமூகவலைதளங்களில் பெரும் அளவில் பரவியுள்ளது. இதனைக் குறித்து பல கிரிக்கெட் வீரர்கள் வித் செய்து வருகின்றனர்.

Categories

Tech |