Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஒரு மாசமா இதான் நடக்குது…. குடிநீர் இன்றி தவிக்கும் மக்கள்… சாலையில் இறங்கி போராட்டம்…!!

ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் இல்லாததால் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்புத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள கல்லாங்காடு பாளையம் மற்றும் சூரிபாளையம் ஆகிய பகுதிகள் நம்பியூர் பேரூராட்சிக்கு உட்பட்டது. அப்பகுதியில் குடிநீர் விநியோகம் செய்து ஒரு மாதம் காலம் ஆகிறது என்றும் அப்படியே தண்ணீர் வந்தாலும் மிகக் குறைந்த அளவிலேயே வருகிறது என்பதால் பொதுமக்கள் அனைவரும் ஒன்றுகூடி, நேற்று காலை 9 மணியளவில் கோவை- நம்பியூர் சாலையில் , குடத்துடன்  ரோட்டில் உட்கார்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து  தகவல் தெரிந்த பேரூராட்சி அதிகாரிகள்  மற்றும் இன்ஸ்பெக்டர் சண்முகம் சம்பவ இடத்திற்கு சென்று  மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் தங்கள் குறைகள் அனைத்தையும் அவர்களிடம் கூறினர். இதனை தொடர்ந்து அதிகாரிகள், மேல் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சீராக குடிநீர் வினியோகிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்  என்று கூறினார்கள் , அதை ஏற்றுக் கொண்ட மக்கள் சாலை மறியலை  கலைத்து அங்கிருந்து புறப்பட்டனர்.

Categories

Tech |