விருதாச்சலத்தில் வேட்புமனு தாக்கல் செய்த பிறகு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 2006 கேப்டன் அவர்களால் வெற்றி பெறபட்ட விருத்தாச்சலம் தொகுதியில், 2021ல் பிரேமலதா விஜயகாந்தாக நான் இன்றைக்கு விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடுவதை பெருமகிழ்ச்சி அடைகிறேன் .
நேற்று முன் தினம் கூட என்னிடம் சென்னையில் கேட்டார்கள். ஏன் விருதாச்சலம் தொகுதி நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று ? எப்போது கேப்டனுக்கும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்துக்கும் முதல் வெற்றியை கொடுத்தது விருத்தாசலம் தொகுதி. அன்றிலிருந்து எங்கள் உயிரோடும், உணர்வோடும், ரத்தத்தில் கலந்த ஒரு தொகுதியாகத்தான் நாங்கள் எல்லோருமே விருதாச்சலம் தொகுதியை பார்க்கிறோம்.
அதுமட்டுமில்லாமல் விருதாச்சலம் தொகுதி மக்கள் அத்தனை பேர் மனதிலும் என்றைக்கும் கேப்டனும், நானும், தேசிய முற்போக்கு திராவிட கழகமும் இருக்கிறது. ஏனென்றால் 2006ஆம் ஆண்டில் ஐந்து ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராக, கேப்டன் மக்களுக்கு வேண்டிய அத்தனை நல்ல திட்டங்களையும் செய்திருக்கிறார்கள்.
அதற்கு அடுத்து 2011லிம் மக்கள் எங்களுடைய வேட்பாளராக அப்பொழுது போட்டி போட்டவருக்கு முரசு சின்னத்திற்கு வெற்றியை கொடுத்தவர்கள். மீண்டும் அந்த வரலாறை 2021ல் நாங்கள் நிரூபிப்போம், விருத்தாச்சலம் தொகுதியில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் வேட்பாளராக நான், முரசு சின்னத்தில் அமோகமான வெற்றியை மக்கள் ஆதரவோடு பெறுவேன் என்று உறுதியாக நம்புகிறேன்.