Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாத்திரையாக மாற்றப்பட்ட தங்கம்…. கடத்தி வந்தவருக்கு அறுவை சிகிச்சை…. அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்….!!

ஒருவர் தங்கத்தை மாத்திரைகளாக விழுங்கி கடத்தி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு துபாயில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெருமளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ரியாஸ் என்பவரை பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் அவரது உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.

அதில் டிஜிட்டல் வாட்ச், லேப்டாப்புகள், 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த செல்போன்கள் இருந்துள்ளது. அதன் பின்னர் முகமது ரியாசை தனி அறைக்கு சென்று சோதனை செய்தபோது அவர் தங்கத்தை மாத்திரைகளாக மாற்றி விழுங்கி கடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதித்து மருத்துவர்களின் உதவியோடு அவரது வயிற்றில் இருந்த 34 தங்க மாத்திரைகளை வெளியே எடுத்துள்ளனர். மேலும் அதிகாரிகள் 13 லட்சம் மதிப்புள்ள 280 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |