கடலூர் மாவட்டம் புவனகிரியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ஸ்டாலின் அம்மா இறந்துவிட்டார்கள், கட்சி உடைந்து போய்விடும் முதலமைச்சர் ஆகி விடலாம் என்று எண்ணி இருந்தார். இப்படி ஒரு விவசாயி வருவார் என்று அவருக்கு தெரியவில்லை. ஆண்டவனா பார்த்து, மக்களுடைய அருள் ஆசியோடு இந்த பதவியில் இருக்கேன் ஸ்டாலின் அவர்களே. ஊர்ந்தும் போகவில்லை…
நகர்ந்து போகவில்லை. நடந்து போய் தான் பதவி ஏற்றுக் கொண்டேன். ஊர்ந்து செல்ல நான் என்ன பல்லியா ? பாம்பா ? அண்ணா திமுக அரசை பற்றி விமர்சனம் செய்வதே அவருடைய வேலை. டெல்டா மாவட்டங்களில் ஸ்டாலின் துணை முதலமைச்சராக இருக்கும்போது தான் ஹைட்ரோகார்பன் மீத்தேன் திட்டங்களை புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டார்கள்.
விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது என்று தெரிந்திருந்தால் அந்த திட்டத்தை கொண்டு வரலாமா ?விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிந்து கையெழுத்து போட்டாரு. பின்னர் மக்களுடைய எதிர்ப்பு வந்தவுடன் அப்படியே பல்டி அடிக்கிறார், மக்களுடைய எதிர்ப்பு வந்ததும் இவரே போராட்டம் செய்கிறார்.
இப்படி மிகப்பெரிய நாடகம் நடத்துவது முக. ஸ்டாலின். யாரை ஏமாற்ற பாக்குறீங்க. மக்கள் கிராம மக்கள் எல்லாம் உஷாராக இருக்கிறார்கள். விவசாயி என்று நினைத்து வீடாதீர்கள். விவசாயிகள் எல்லாம் இப்போ விஞ்ஞான முறைப்படி விவசாயம் செய்யுறாங்க. பழைய காலம் மாதிரி விவசாயிகளை ஏமாற்றி ஓட்டு வாங்க லாம் என்று நினைத்து விடவேண்டாம் என முதல்வர் தெரிவித்தார்.