கூட்டணி தொடர்பான எந்த விவகாரத்தையும் எங்களுடன் காங்கிரஸ் ஆலோசிக்கவில்லை என்று கர்நாடக காபத்து முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.
கர்நாடக மாநில சட்டசபையில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் காங் – மஜத கூட்டணி அரசு தோல்வி அடைந்த நிலையில் முதல்வர் குமாரசாமி கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். குமாரசாமியின் ராஜினாமாவை ஏற்பதாக அறிவித்த கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா புதிய அரசு அமையும் வரை குமாரசாமி காபந்து முதல்வராக தொடர வேண்டும் என்று ஆளுநர் அறிவுறுத்தினார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்கள் குமாரசாமியிடம் இருகட்சிகள் இடையிலான கூட்டணி தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்க்கு பதிலளித்து பேசிய குமாரசாமி , கூட்டணி தொடர்பான எந்த விவகாரத்தையும் எங்களுடன் அவர்கள் ஆலோசிக்கவில்லை. அவர்கள் சுதந்திரமாக உள்ளனர். நாங்களும் அப்படியே செயல்படுகிறோம். கூட்டணி தேவையென்றால் நாங்கள் இணைந்து செயல்படுவோம். மற்றப்படி எங்களுடைய கட்சியை வலுப்படுத்த நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம் என்று குமாரசாமி தெரிவித்தார்.