வேட்பாளர்களுக்கான செலவின பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பல கட்சிகள் போட்டி போட்டு வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். பல கட்சிகள் சுயேச்சையாக போட்டியிடுகிறது. மேலும் இந்திய தேர்தல் ஆணையம் வேட்பாளர்களுக்கான செலவின பட்டியலை தற்போது அறிவித்துள்ளது. அதன்படி
5 ஸ்டார் ஹோட்டலில் தங்கினால் ரூ. 7,500
3 ஸ்டார் ஹோட்டலில் தங்கினால் ரூ. 5,000
சாதாரண ஹோட்டலில் தங்கினால் ரூ. 3,500
என்று நிர்ணயித்து விலை பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி வேட்பாளர்கள் இதற்கு தங்களது செலவுகளை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது.