ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் செம்பருத்தி சீரியலில் பிரபல நடிகர் ஒருவர் இணைந்துள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலில் ஷபானா ,கார்த்திக் ராஜ் ,பிரியா ராமன் ஆகியோர் நடித்து வந்தனர். கடந்த வருடம் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜனனி விலகினார். இதையடுத்து இந்த சீரியலின் ஹீரோவாக நடித்து வந்த கார்த்திக் விலகியதால் அவருக்கு பதில் அக்னி நடித்து வருகிறார்.
இந்நிலையில் இந்த சீரியலில் பிரபல நடிகர் லிவிங்ஸ்டன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கண்ணான கண்ணே , பூவே பூச்சூடவா சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.