நடிகர் சூர்யா இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 40 படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார் .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இவர் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் நவரசா என்ற படத்தில் நடித்து முடித்தார். மேலும் சமீபத்தில் நடிகர் சூர்யா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின் குணமடைந்தார்.
Feels good to be back on sets! @pandiraj_dir @RathnaveluDop @immancomposer @sunpictures @AntonyLRuben @jacki_art @anbariv #Suriya40 pic.twitter.com/gcxlpdafwc
— Suriya Sivakumar (@Suriya_offl) March 18, 2021
இந்நிலையில் நடிகர் சூர்யா இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சூர்யா 40’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். மேலும் சூர்யா கையில் துப்பாக்கியுடன் நிற்கும் மிரட்டலான போஸ்டர் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது மீண்டும் சூர்யா படப்பிடிப்புகளில் கலந்து கொண்டதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.