சீலநாயக்கன்பட்டியில் மாற்றுத்திறனாளி பெண்ணை ஏமாற்றி பலாத்காரம் செய்த வாலிபர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டத்திலுள்ள சீலநாயக்கன்பட்டியில் ஐயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமணமாகி அவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார் . மேலும் அப்பகுதியில் கட்டிடம் கட்டும் பணி செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஐயப்பன் , வீராணம் பகுதிக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு குடியேறினார்.
அப்போது அங்கு மாற்றுத்திறனாளி பெண் ஒருவருக்கும் ஐயப்பனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நட்புடன் பழகி வந்த ஐயப்பன் அந்த பெண்ணை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் . இதனை அறிந்த அப்பெண்ணின் பெற்றோர்கள் அப்பகுதியில் இருக்கும் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர், இதனையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.