பிரிட்டனில் இளைஞனை கத்தியால் குத்த சென்ற சம்பவம் குறித்து வெளியான சிசிடிவி காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டன் தலைநகரான லண்டனில் கடந்த சில ஆண்டுகளாக வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது மக்கள் அதிகமாக கூடும் கடைவீதியில் ஒருவரை இரு நபர்கள் கத்தியுடன் துரத்துவது அந்த நபர் பயந்து அருகிலிருந்த கபாலி கடைக்குள் நுழைந்து தன்னை காப்பாற்றிக் கொள்ளும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இந்த காட்சியானது சமூக வலைத்தளங்களில் வெகுவாக பரவி வருகிறது.
சிசி டிவி காட்சிகள் புகைப்படமாக வெளியிடப்பட்டுள்ளது. அதில் கருப்பு துணி அணிந்த நபர் அருகிலிருந்த நபரை தள்ளிவிட்டு கபாலி கடைக்குள் நுழைந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள முயற்சிப்பது போலவும் முகமூடி அணிந்து வந்த இரு நபர்கள் அவரை கதவைத்திறந்து தாக்க முயற்சிப்பது போலவும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கொலை முயற்சிக்கு என்ன காரணம் என்ன என்பது குறித்து அந்த நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.