Categories
கிரிக்கெட் விளையாட்டு

இன்றைய நாள்… கிரிக்கெட் உலகையே உலுக்கிய மரணம்… பெரும் சோகம்…!!!

கடந்த 2007ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதி கிரிக்கெட் பிரபலம் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

கிரிக்கெட் உலகில் சிறந்து விளங்கிய பால் உல்மர் கடந்த 2007 ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக 2005 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் வெற்றி பெறுவதற்கு அவர் முக்கிய பங்கு வகித்தார்.

எனவே 2007 ஆம் ஆண்டு உலக கோப்பை பாகிஸ்தான் வெல்லும் என அதிக எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் பாகிஸ்தான் முதல் சுற்றிலேயே வெளியேறியது. அதனால் சூதாட்டக்காரர்கள் இவரை கொலை செய்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Categories

Tech |