Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

சீமானின் ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா ? வெளியான அதிகாரபூர்வ தகவல் …!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பு மனு தாக்கல் செய்ததில் அவரது சொத்து பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் தனது பெயரில் ரூ. 31,06,500 மதிப்பில் அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும் தனது மனைவி பெயரில் ரூ. 63,25,031 மதிப்பில் அசையும் சொத்துக்களும் ரூ. 25,30,000 மதிப்பில் அசையா சொத்துக்களும் இருப்பதாகவும் வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி தனக்கு கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 65,500 வருமானம் வந்ததாகவும்,  2019-20 ஆம் நிதியாண்டில் தமக்கு வந்த ஆண்டு வருமானம் ரூ. 1000 மட்டுமே என்றும் வேட்பு மனுவில் கூறியுள்ளார். இதனை கண்ட இணையவாசிகள் சீமானின் ஆண்டு வருமானம் வெறும் ரூ. 1000 மட்டுமா? என்று கேள்வி எழுப்பி மீம்ஸ் போட்டுள்ளனர். இதனால் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் தாக்கல் செய்த வேட்பு மனுவில் எழுத்துப்பிழை ஏற்பட்டுள்ளதாக கூறி இரண்டாவது முறையாக வேறொரு ஒரு வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் தனது ஆண்டு வருமானம் ரூ. 2,60,000 என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |