கர்நாடக மாநில நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்த பகுஜன் சமாஜ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரை அக்கட்சியின் தலைவர் மாயாவதி நீக்கியுள்ளார்.
கர்நாடக மாநில அரசியலில் கடந்த இரண்டு வாரமாக நடந்து வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு கவிழ்ந்ததோடு தனது முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார். குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 உறுப்பினர் ஆதரவாகவும் , 105 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். இந்நிலையில் அங்குள்ள பகுஜன் சமாஜ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததால் அவரை மாயாவதி கட்சியில் இருந்து நீக்கியுள்ளார்.

இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காத கர்நாடக மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான மகேஷ் குமாரசாமி அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டுமென்று அக்கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்திருந்த நிலையில் இவர் நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளார். இதனால் மாயாவதி தனது ட்வீட்_டர் பக்கத்தில், கட்சியின் அறிவுரையை ஏற்க மறுத்து கர்நாடக மாநில சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்த மகேஷ் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே இவர் உடனடியாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.