ராஜஸ்தான் மாநிலத்தில் இளம்பெண் தன் தாயை சுத்தியலால் தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்ப்பூர் பகுதியில் உள்ள சதுல்பூரில் திகர்லா கிராமத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் தன் தாயுடன் வசித்து வந்தார். அவர் தன் தாயுடன் நடந்த வாக்குவாதத்தில் தாயை சுத்தியலால் தாக்கி கொலை செய்துவிட்டு உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தாயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.இது குறித்து அக்கம்பக்கத்தினரிடம் விசாரிக்கும்போது வீட்டில் தொலைக்காட்சி சத்தம் அதிகமாக இருந்தது அதனால் தங்களுக்கு எதுவும் கேட்கவில்லை என்று கூறியுள்ளனர். மேலும் விசாரணையில் அந்தப் பெண்ணுக்கு சிறிது மனநல பாதிப்பு இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.