புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி யின் பெயர் இல்லை .
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், திமுக, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை கூட்டணி வைத்து போட்டி போடுகிறது. காங்கிரஸ் 13 தொகுதிகளிலும் , திமுக 13, விடுதலை சிறுத்தைகள் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரு தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
காங்கிரஸ் போட்டியிடும் தொகுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகியது. இதில் நாராயணசாமி பெயர் இடம்பெறவில்லை. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
- காரைக்கால் வடக்கு – ஏ.வி. சுப்ரமணியன்
- மாஹே – ரமேஷ்
- திருநள்ளாறு – கமலக்கண்ணன்
- அரியாங்குப்பம் – ஜெயமூர்த்தி
- ஏம்பலம் – கந்தசாமி
- நெடுங்காடு – மாரிமுத்து
- மணவெளி – அனந்தராமன்
- நெட்டப்பாக்கம் – விஜயவேணி
- முத்தியால்பேட்டை – செந்தில்குமரன்
- லாஸ்பேட்டை – வைத்தியநாதன்
- காமராஜ் நகர் – ஷாஜஹான்
- இந்திரா நகர் – எம். கண்ணன்
- கதிர்காமம் – செல்வநாதன்
- ஊசுடு – கார்த்திக்கேயன்