மதுரையில் மெதுமெதுவாக அதிகரித்துவரும் கொரோனா தொற்றால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவி பொது சுகாதார பேரழிவினை உண்டாக்கியது. இத்தொற்றினை தடுக்க அரசாங்கம் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருவதோடு மட்டுமல்லாமல், பல விதிமுறைகளையும் அமலுக்கு கொண்டு வந்தது . இதனால் மெதுவாக குறையத் தொடங்கிய கொரோனா தொற்று தற்போது அனைத்து பகுதிகளிலும் மீண்டும் படை எடுக்கத் தொடங்கியுள்ளது .
அந்த வகையில் மதுரையில் நேற்று புதிதாக 13 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 389 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் 82 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 9 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார் . இந்நிலையில் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 845 ஆக உயர்ந்துள்ளது . மேலும் மதுரையில் கொரோனா மீண்டும் படை எடுப்பதால் பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணியுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.