Categories
தேசிய செய்திகள்

ஒரே அடியில் தாய் கொலை…. மகனின் வெறிச்செயல்…. கண்டனங்களை குவிக்கும் காணொளி…!!

பெற்ற தாயை மகன் அடித்து கொலை செய்த காணொளி சமூகவலைத்தளத்தில் வைரலாகி கண்டனங்கள் எழுந்து வருகின்றது.

டெல்லியை சேர்ந்த பெண்மணி (76 வயது) தனது மகனுடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று அந்த பெண்மணி தனது மகன் மற்றும் மருமகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது கோபமடைந்த அவருடைய மகன் அவரை ஓங்கி அடித்துள்ளார். இதனால் அந்தப் பெண்மணி மயக்கமடைந்து கீழே சுருண்டு விழுந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மருமகள் அந்த பெண்மணியை எழுப்ப முயற்சித்துள்ளார். ஆனால் அவர் கண்திறந்து பார்க்காத காரணத்தால் அவர்கள் இருவரும் அந்த பெண்மணியை உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அந்த பெண்மணியை பரிசோதனை செய்த  மருத்துவர்கள் அவர்  இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர். மேலும்  இந்த துயர சம்பவம் குறித்த வீடியோவை சாஹில் முரளி மெங்ஹானி என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். இதனையடுத்து தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலான நிலையில் தாயை அடித்த  அந்த நபர் தண்டிக்கப்பட வேண்டும் என்று இணையதள வாசிகள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

Categories

Tech |