அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்கு 3000 கோடி ரூபாய் இதுவரை வசூல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கோயிலின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள ஸ்ரீராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா என்ற அமைப்பின் செயலாளர் சம்பத் ராய் கோயிலின் கட்டுமானப் பணிகள் குறித்தும்,நன்கொடை நிதி குறித்தும் சில தகவல்களை கூறியுள்ளார். அதில் கோயில் கட்டுமானப் பணிக்கு இதுவரை சுமார் 3000 ஆயிரம் கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும், வெளிநாடுகளிலிருந்து செங்கற்கள் போன்ற பொருள்கள் கட்டுமான பணிக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும் நன்கொடை பணிகள் இன்னும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன எனவும் எதிர்பார்த்ததைவிட பல மடங்கு நிதி வந்துள்ளதாகவும், கோயில் கட்டுமானத்திற்கு நிதி வழங்கும் பொது உற்சாகத்தையும், ஒத்துழைப்பையும் தந்த மக்களுக்கு தன் பாராட்டுகளை தெரிவிப்பதாகவும் கூறினார். மேலும்நிதி அளிக்க விரும்பும் பக்தர்கள் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தலாம் எனவும் பணம் செலுத்த பஞ்சாப் நேஷனல் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகள் மூலமாகவும் நிதி கொடுக்கலாம் என அறக்கட்டளை செயலாளர் ராய் கூறினார்.