2020_இல் டோக்கியோவில் நடக்க இருக்கும் பாரா ஒலிம்பிக் போட்டியில் செயற்கை நுண்ணறிவு ரோபோ பயன்படுத்தப்பட உள்ளது
வருகின்ற 2020ல் ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற இருக்கிறது. இதற்கான ஒரு வருட கவுண்ட் டவுன் தொடங்கப்பட்டது. இந்நிலையில் ஜப்பான் நாடு தனது தொழில்நுட்பத்தில் எந்த அளவு உயர்ந்துள்ளது என்பதை உலகறியச் செய்வதற்கு செயற்கை நுண்ணறிவு கொண்டு தயாரிக்கப்பட்ட சிறிய ரோபோ பொம்மைகளை ஒலிம்பிக்கில் பயன்படுத்தப்பட உள்ளது.
இந்த ரோபோ பொம்மைகள் நீலம், இளஞ்சிவப்பு நிறங்களில்உருவாக்கப்பட்டுள்ளன. இதற்க்கு மிரைடோவா, சொமைட்டி என்ற பெயர்களும் சூட்டப்பட்டுள்ளது. இந்த ரோபோவானது மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியாகவும்,குழந்தைகளுடன் உரையாடுவதும்,பார்வையாளர்களை வரவேற்பதற்கும்,போட்டியில் போட்டியாளர்களுக்கு தேவைப்படும் பொருட்களை எடுத்து செல்வதற்கும் பயன்படுத்தப்பட இருக்கிறது.