Categories
மாநில செய்திகள்

மீண்டும் முழு ஊரடங்கு..? பிரதமருடன் தமிழக முதல்வர் அவசர ஆலோசனை..!!

கடந்த சில நாட்களாக இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பிரதமருடன் முதல்வர் பழனிசாமி அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது. 85 சதவீதத்தை மகாராஷ்டிரா, தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவில் தாக்கம் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் 21ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. குஜராத் மாநிலத்தின் முக்கிய பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வரக்கூடியவர்கள் இ பாஸ் கட்டாயம் என்று தெரிவித்துள்ளது. விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் 16 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பள்ளிகளில் கொரோனா அதிகரித்துள்ளதால் பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது .மறுபக்கம் தேர்தல் பிரச்சாரம் அதிக அளவில் நடைபெற்று வருவதால் கொரோனா  பரவுவதற்கான சூழல் அதிக அளவு உள்ளது.

இதையடுத்து நேற்று தலைமை செயலகத்தில் கலெக்ட்டர் நடத்திய ஆலோசனையில் முக கவசம் அணிதல், உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் கொரோனா பரவல் குறித்து அனைத்து மாநில முதல்-மந்திரிகள் உடன் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழகம் உள்ளிட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து விவாதிக்கலாம் என செய்தி வெளியாகியுள்ளது. கொரோனா தடுப்பூசி எவ்வளவு செலுத்தப்பட்டு வருகிறது என்பது குறித்து விவாதிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |