Categories
அரசியல் மாநில செய்திகள்

பவுடர் டப்பா…. சீப்பு, கண்ணாடி… கொண்டு போறாங்க…. எப்படி நாடு வளரும் ?

செய்தியாளர்களிடம் பேசிய சீமான், 100நாட்கள் வேலையை 150நாட்களாக உயர்த்தியது குறித்த கேள்விக்கு, அதனால் தான் நாடு நாசமா போச்சு. வேளாண்மையை விட்டு குடிகள் வெளியேறியது காரணம் என்ன ? எங்க அம்மா விவசாயம் செய்யுறாங்க… தக்காளியை பறிக்கவோ, வெண்டைக்காயை பறிக்கவோ,  பருத்தி எடுக்கவோ, மிளகாய் பழம் பிறக்கவோ, கருத்து அறுக்கவோ ஆள் வரவில்லை. இந்த நூறு நாள் வேலை திட்டத்தில் தூர் வாரிய ஏரிகள் எத்தனை ?புதிதாக வெட்டிய நீர்நிலையில் எத்தனை ? நட்டு வளர்த்த மரக்கன்றுகள் எத்தனை ? சொல்லுங்க…

100 நாட்கள் வேளையில் என்ன நடந்துருக்கு ? எங்க ஊருல நூறு நாள் வேலை நடக்குது. காட்டிற்குள், கண்மாய்குள் சீட்டு ஆடிட்டு இருக்காங்க . என் சொந்தக்கார பிள்ளைகள், எங்க அண்ணி,எங்க சித்தி எல்லாம் போகிறார். போயிட்டு தூங்கிட்டு, அப்படி பவுடர் டப்பா, சீப்பு கண்ணாடி எடுத்துக்கொண்டு போயிட்டு, தலைவாரிட்டு திருப்பி வருகிறார்கள். உழைப்பிலிருந்து மக்களை வெளியேற்றிவிட்டு நாடு எப்படி வளரும் ?

அந்த உழைப்பை நான் என்ன செய்கிறேன் ? அரசு நூறு நாள் வேலை திட்டத்தில் நூறு ரூபாய் கொடுக்குது. நாங்கள் ஒரு நூறு ரூபாய் கொடுக்கிறோம், அதே வேலையை நிலத்தில் செய்யுங்க, விவசாயத்தில் ஈடுபடுங்க அப்படி சொன்னா அது சரியாக இருக்கும். உழைப்பிலிருந்து மக்களை வெளியேற்றிவிட்டு சும்மா இருக்க நூறு ரூபாய் கொடுக்கிறேன் என்றால் அது தான் வாக்கை பிரிப்பது என சீமான் ஆவேசமானார்.

Categories

Tech |