Categories
உலக செய்திகள்

“நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்”.. கேலி செய்துவிட்டு.. கெஞ்சும் ஐரோப்பிய ஒன்றியம்..!!

ரஷ்யாவின் தடுப்பூசியை கேலி செய்த ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அவர்களிடமே தடுப்பூசிக்காக கெஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. 

ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள், ரஷ்யா தயாரித்த ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை ஐரோப்பிய நாடுகளில் தயார் செய்தால் தங்கள் மக்களை காப்பாற்றிக் கொள்ள உதவும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அதாவது ரஷ்யா தான் உலக நாடுகளில் முதன் முதலில் கொரோனா தடுப்பூசியை அறிமுகம் செய்துள்ளது.

ஆனால் ஐரோப்பிய நாடுகள் தடுப்பூசி விவகாரத்தில் ரஷ்யாவை கேலி செய்தார்கள். மேலும் அதன் நம்பகத்தன்மை தொடர்பில் கேள்வியும் எழுப்பினார்கள். இந்நிலையில் தற்போது தங்கள் மக்களை காப்பாற்ற அந்த தடுப்பூசியை பெற ரஷ்யாவிடம் கேட்கும் சூழல் ஏற்பட்டுவிட்டது.  அதாவது ஐரோப்பிய நாடுகளில் பிரிட்டனின் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை செலுத்திக்கொண்ட சில நபர்களுக்கு ரத்தம் உறைதல் பிரச்சனை ஏற்பட்டது.

மேலும் இந்த தடுப்பூசியால் சிலர் உயிரிழந்ததால் ஜெர்மனி, பிரான்ஸ் உட்பட ஐரோப்பிய நாடுகள் சுதாரித்து கொண்டன. இதனைத்தொடர்ந்து இந்த தடுப்பூசி செலுத்துவதை  உடனடியாக நிறுத்திவிட்டனர். மேலும் ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை செலுத்த ஐரோப்பிய நாடுகள் பல ஒப்புதல் அளித்திருக்கிறது.

இதற்கிடையில் ஸ்பூட்னிக் வி தடுப்பூசி தயாரிப்பதற்கு இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் முன்னேற்பாடுகள் விரைவில் செயல்படுத்தப்படும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 27 நாடுகள் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தில், ஸ்பூட்னிக் வி தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில், மேற்கத்திய நாடுகளின் தயாரிப்பு இல்லாமல் பயன்பாட்டிற்கு வரும் தடுப்பூசி ஸ்புட்னிக் வி தான். இந்த பெருமை ரஷ்யாவையே சாரும்.

Categories

Tech |