Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. விமானப்படை ஊழியருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

விமானப்படை ஊழியரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள முத்தபுதுபேட்டை பகுதியில் இருக்கும் இந்திய விமானப்படை குடியிருப்பில் உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அஸ்வின் குமார் குப்தா என்பவர் வசித்து வருகிறார். இவர் இந்திய விமானப்படையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜோதி குப்தா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அஸ்வின்குமார் காலையில் நடைப் பயிற்சிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

அப்போது தனது மனைவி ஜோதி குப்தா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த முத்தப்புதுபேட்டை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து அஸ்வின்குமார் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த முத்தபுதுபேட்டை காவல்துறையினர் ஜோதி குப்தா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |