பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் கண்டக்டர்கள் முக கவசம் அணியாமல் பணிபுரிந்ததால் ஆணையாளர் அவர்களுக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி ஆணையாளர் குமரவேல் பாண்டியன் கோவை காந்திபுரம், கிராஸ்கட் சாலை, 100 அடி ரோடு போன்ற பகுதிகளில் இருக்கும் கடைகள், வர்த்தக நிறுவனங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது கடை ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்கின்றனரா என்பது குறித்து ஆய்வு செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து காந்திபுரம் டவுன் பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்தபோது அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள், கண்டக்டர்கள், பயணிகள் முறையாக முக கவசம் அணிந்து உள்ளனரா என்று ஆய்வு செய்தபோது நான்கு பேருந்துகளில் ஓட்டுனர்கள், கண்டக்டர்கள் முககவசம் அணியாமல் வேலை பார்த்ததை ஆணையாளர் கண்டுபிடித்துள்ளார். இதனால் முக கவசம் அணியாமல் பணிபுரிந்த ஓட்டுனர் மற்றும் கண்டக்டர்களுக்கு 500 ரூபாய் அபராதமும், பொதுமக்களுக்கு 100 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.