Categories
மாநில செய்திகள்

தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய முக ஸ்டாலின்… சூடுபிடிக்கும் தேர்தல் களம்..!!

வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நோக்குடன் தேர்தல் பிரச்சாரத்தை முகஸ்டாலின் தொடங்கியுள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிடுவதற்காக பல கட்சிகள் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். பலர் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். அதிமுக திமுக என்ற பெரும் கட்சிகள் போட்டி போட்டு தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் முதற்கட்டமாக தேர்தல் பிரச்சாரத்தை தனது சொந்த ஊரான திருவாரூரில் இருந்து தொடங்கியுள்ளார். தேர்தல் அறிக்கையில் 505 உறுதிமொழிகள் கூறப்பட்டு உள்ளதாகவும், அவை அனைத்தும் வெற்றி பெற்றவுடன் நிறைவேற்றப்படும் எனக்கூறி உறுதிமொழியின் முக்கிய கூறுகளை பட்டியலிட்டார்.

Categories

Tech |