சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக பெயர் சேர்க்கப்பட்ட வாக்காளர்களில் 659 வாக்காளர்களுக்கு அடையாள அட்டை சிறப்பு முகாமில் பதிவிறக்கம் செய்து வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திருக்கும் 659 வாக்காளர்களுக்கு அடையாள அட்டை பதிவிறக்கம் செய்யப்பட்டு சிறப்பு முகாமில் வழங்கப்பட்டது என்று மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார். புதிய புகைப்பட அடையாள அட்டைகள் e-EPIC செயலி மூலம் சிறப்பு முகாமில் பதிவிறக்கம் செய்யப்பட்டு வழங்கப்பட்டது. இந்த சிறப்பு முகாமை மதுசூதன் ரெட்டி பார்வையிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது , வருகின்ற 13-ஆம் தேதி, 14-ஆம் தேதி ஆகிய தினங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறும்.
அதில் புதிதாக பெயர் சேர்க்கப்பட்ட வாக்காளர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் எல்லைக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் புகைப்பட அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். அந்த முகாமில் திருப்பத்தூர் தொகுதியில் 150 பேரும், காரைக்குடி தொகுதியில் 196 இளம் வாக்காளர்களும், மானாமதுரை தொகுதியில் 145 பேரும், சிவகங்கை தொகுதியில் 168 பேரும் மொத்தம் 659 பேர் வாக்காளர் அட்டை புதிதாக பதிவிறக்கம் செய்துள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.