Categories
அரசியல் மாநில செய்திகள்

எதிரிகளை எதிர்கொள்ள…. ரொம்ப துடிப்போட இருக்கோம்…! ரெடியான தமிழக பாஜக ..!!

நாங்கள் எல்லாரும் ரொம்ப துடிப்போட எதிரிகளை களத்தில் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.

சென்னையில் பாஜக மாநிலத் தலைவரும், தாராபுரம் சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எல். முருகன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 20 தொகுதியில் 17 தொகுதிக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே எங்களுடைய நிர்வாகிகள் தேர்தல் களத்துல பணியில் இறங்கி இருக்கிறார்கள். மீதி மூன்று தொகுதிகளுக்கான பட்டியல் கூடிய சீக்கிரம் வெளியாகும். பாரதிய ஜனதா கட்சியினுடைய வேட்பாளர்கள் அத்தனை பேருமே வெற்றி பெற்று சட்டசபைக்கு செல்வது நிச்சயிக்கப்பட்ட ஒன்று.

20தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பானது உறுதி செய்யப்பட்ட ஒன்று. நான் பலமுறை உங்களிடம் சொல்லியிருக்கிறேன். பாரதிய ஜனதா கட்சி நிச்சயமாக இந்த முறை இரட்டை இலக்கில் சட்டசபையில் உட்காரும் என ஏற்கனவே சொல்லி இருந்தேன். அது நிச்சயமாக நடக்க போகிறது. நாங்க எல்லாருமே ரொம்ப துடிப்போட எதிரிகளை களத்தில் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.

தாராபுரம் ரூரல் பகுதி மக்கள் அதிகமாக இருக்கிறார்கள். நெல்  விதைகளுக்கான உற்பத்தி மையமாக அந்த பகுதி இருக்கிறது. மருத்துவ பயிர்கள் அந்த பகுதியில் அதிகமாக பயிரிடப்படுகிறது. விவசாயிகள் அதிகம் நிறைந்த பகுதி, அந்த பகுதி மக்கள் அதிகமாக சொன்னது, பெண்களுக்கான அரசு கல்லூரி வேணும் என  சொல்லியுள்ளார்கள். அது எங்களின்  வாக்குறுதிகளாக இருக்கும். என்ன சொல்றோமோ அதை நிறைவேற்றக் கூடிய வகையில்  எங்களுடைய வாக்குறுதிகள் இருக்கும் என எல். முருகன் தெரிவித்தார்.

Categories

Tech |