திரிஷ்யம் 2 படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப்பை பாராட்டி ராஜமௌலி மெசேஜ் அனுப்பியுள்ளார்.
மலையாள திரையுலகில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால்,மீனா நடிப்பில் வெளியான “திரிஷ்யம் 2” படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றது. இந்நிலையில் தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குனரான எஸ்எஸ் ராஜமவுலி திரிஷ்யம் 2 படத்தின் இயக்குனரான ஜீத்து ஜோசப்பிற்கு பாராட்டி மெசேஜ் அனுப்பியுள்ளார்.
அதில், “நான் திரைப்பட இயக்குனர் ராஜமௌலி. சில நாட்களுக்கு முன்பு திரிஷ்யம் படத்தை பார்த்தேன். அப்படத்தின் இயக்கம், திரைக்கதை, படத்தொகுப்பு, நடிப்பு என அனைத்துமே மிகவும் அற்புதமாக இருந்தது. ஆனால் எழுத்து உண்மையிலேயே மாறுபட்டு இருந்தது. அது உலகத்தரம் வாய்ந்தது.
இப்படத்தின் முதல் பாகம் மாஸ்டர் பீஸ் தான்.தற்போது எடுக்கப்பட்டுள்ள இரண்டாம் பாகமும் முதல் பாகத்துடன் ஒன்றிப் போகும் அளவிற்கு உள்ளது. இதுபோல உங்களிடம் பல மாஸ்டர் பீசுகளை எதிர்பார்க்கிறேன் என்று மெசேஜ் செய்துள்ளார்.