மிகப் பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி நிமோனியா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழில் தீனா, சமஸ்தானம் மற்றும் ஐ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மலையாள நடிகர் சுரேஷ் கோபி நிமோனியா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். படப்பிடிப்பின் போது அவருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கேரளாவில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளர் பட்டியலில் அவர் பெயரும் நேற்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.