Categories
உலக செய்திகள்

ரூ.1,96,00,00,000 கொடுங்க…! ஜார்ஜ் பிளாய்ட் வழக்கில் அதிரடி… நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு …!!

அமெரிக்காவில் கருப்பினத்தவர் கொல்லப்பட்ட வழக்கில் அவரது குடும்பத்தினருக்கு 27 மில்லியன் டாலர் நிவாரணமாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவிலுள்ள மினியா போலீஸ் என்ற நகரில் வசித்தவர் ஜார்ஜ் பிளாய்ட் . இவர் சென்ற ஆண்டு மே  மாதம் அப்பகுதியில் உள்ள கடைக்கு சென்று பொருள்களை வாங்கி விட்டு பணத்தை கொடுத்துள்ளார். அப்போது  அவர் கொடுத்த பணத்தில் இருபது டாலர் கள்ள நோட்டு இருந்தது என்று கடையின் ஊழியர்  காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். தகவலின்பேரில் அங்கு வந்த காவல்துறையினர் விசாரணை செய்வதற்காக  ஜார்ஜ் பிளாய்ட்-டை காவல் நிலையத்திற்கு அழைத்து உள்ளனர்.

ஆனால் ஜார்ஜ்  வர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த  டெரிக் சாவின் என்ற காவல் துறை அதிகாரி ஜார்ஜ்-ஐ  கீழே தள்ளி அவரது கழுத்தின் மேல் தனது கால் முட்டியை வைத்து அழுத்தி உள்ளார். இதனால் மூச்சு விட முடியாமல் திணறி ஜார்ஜ்  கெஞ்சிய போதும் அவர் விடாமல் அழுத்தியதால் இறுதியில் அவர் மூச்சுத்திணறி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வெளியான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதனால் டெரிக் சாவின்-க்கு எதிராகவும், ஜார்ஜ் பிளாய்ட்-டிற்கு  ஆதரவாகவும்  உலகம் முழுவதும் போராட்டம் நடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ஜார்ஜின் குடும்பத்தினர் அவரைக் கொன்ற காவல்துறை அதிகாரி உட்பட 4 பேர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டெரிக் சாவின் உட்பட 4 பேரையும் பணி நீக்கம் செய்தார் . மேலும் டெரிக் சாவின் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு அங்குள்ள நீதிமன்றத்தில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.

அப்போது டெரிக் சாவின் குற்றத்தை ஒப்புக் கொள்ளாமல், எனக்கு காவல்துறையில் அளித்த  பயிற்சியை முறையாக தான் பின்பற்றினேன் என்று கூறினார். இதனால் நீதிபதி இந்த  வழக்கின்  விசாரணையை தள்ளி வைத்தார். இதில்  டெரிக் சாவின்  மீதான குற்றச்சாட்டு நிரூபணமானால் அவருக்கு 65 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தகவல் வெளியானது. இந்நிலையில் ஜார்ஜ் வசித்த மினியா போலீஸ் என்ற நகர நிர்வாகத்திற்கு எதிராக தொடரப்பட்ட  வழக்கில் அவரது குடும்பத்திற்கு 27 மில்லியன் டாலர்கள் நிவாரணமாக வழங்க அந்நகர அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

Categories

Tech |