மன உளைச்சலில் இருந்த மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள பொத்திரெட்டிபட்டி கிராமத்தில் மாரியம்மாள் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கால் வலியால் அவதிப்பட்டு வந்த மூதாட்டி பல்வேறு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது கால் வலி குணமடையவில்லை.
இதனால் மன உளைச்சலில் இருந்த மூதாட்டி தனது வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த இருக்கன்குடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியின் உடலை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.