Categories
சினிமா தமிழ் சினிமா

அரண்மனை 3 ரிலீஸ் எப்போது? வெளியான முக்கிய தகவல்…!!

அரண்மனை 3 திரைப்படம் எப்போது ரிலீஸ் செய்யப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் வெளியான மெஹா ஹிட் திகில் திரைப்படம் அரண்மனை. இதன் முதல் இரண்டு பாகங்களும் நல்ல வசூல் சாதனை பெற்றது. இதை தொடர்ந்து அரண்மனை மூன்றாம் பாகத்தையும் சுந்தர் சி இயக்கி வந்தார். தற்போது அரண்மனை 3 படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் பின்னணி பணிகள் மட்டும் இன்னும் மீதம் உள்ளது.

அதனை முடிப்பதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அரண்மனை 3 படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ளார். ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் ஆகிய மூன்று நடிகைகள் கதாநாயகியாக நடித்துள்ளனர். மேலும் விவேக் மற்றும் யோகி பாபு காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்திற்கான ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வரும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.கூடிய விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |