Categories
உலக செய்திகள்

அடப்பாவி… ஒரு சாண்ட்விச் வாங்க ஹெலிகாப்டரை எடுத்துட்டு போவியா… வைரலாகும் வீடியோ…!!!

இங்கிலாந்தில் ஊரடங்கு காரணமாக ஹெலிகாப்டரில் சென்று நபர் ஒருவர் சாண்ட்விட்ச் வாங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது.அதனால்  உலகநாடுகள் முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு  பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன .அதன் பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் சில நாடுகளில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன . ஆனால்  இங்கிலாந்து நாட்டில்கொரோனா பாதிப்பு குறையாததால் ஊரடங்கு அமலில் உள்ளது .அதனால் மக்கள் வெளியே செல்ல முடியாமல்  வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கின்றனர் .

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெண் ஒருவர் தனக்கு பிடித்த மெக்டொனால்ட் பர்கரை வாங்குவதற்காக வீட்டில் இருந்த காரை சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓட்டிச் சென்றார்.இதனை அறிந்த காவல்துறையினர் அப்பெண்ணை பிடித்து ஊரடங்கு மீ றியதற்கான அபராதத்தை வசூலித்தார்கள்.

இச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து அதே இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் தனக்குப் பிடித்த சாண்ட்வி ட்சை வாங்க நினைத்துள்ளளா ர். அதன்பிறகு சுமார் 130 கிலோமீட்டர் தூரம் வரை ஹெலிகாப்டரில் பரந்து சென்று சாண்ட்விட்ச் வாங்கச் சென்றார். இதனை  பார்த்து ஹோட்டலில் உள்ள அனைவரும்  மிரண்டு போயினர்.

அதனை அந்த கடைக்காரர்   உடனடியாக  வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார் . இந்த வீடியோ லட்சக்கணக்கான பார்வையாளர்களை கவர்ந்தது. அதேசமயம் ஊரடங்கு மீறியதால் அந்த நபரிடம் விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என சிலர் கூறுகிறார்கள்.

Categories

Tech |